கருப்பு பூனையும் கருவாட்டு துண்டும்

முன்னுரை: எலி வேட்டையும்... டிஜிட்டல் ஜாதகமும்! ​பல்லடம் மாதப்பூர் பண்ணை வீடே ஒரு பெரிய போர்க்களமாக மாறப்போகிறது! பண்ணையார் கவுண்டமணியின் மகன் சத்யராஜுக்குத் திருமணம் நடக்க வேண்டுமானால், அந்தப் பழைய கருப்புப் பூனைக்குத் தொடர்ந்து 11 நாட்கள் 'எலிக்கறி' விருந்து வைக்க வேண்டும் என்ற விசித்திரமான ஜாதகத் தடையைச் சொல்கிறார் கொசவம்பாளையம் ஜோசியர் கியா ஜோதி. ​கையில் பஞ்சாங்கம், கக்கத்தில் ஸ்மார்ட்போன் என 'கூகுள் பே' (G-Pay) வழியாகவே பரிகாரம் சொல்லும் ஜோசியரின் அறிவுரைப்படி, சத்யராஜ் டீம் எலி வேட்டையில் இறங்குகிறது. ஆனால், வில்லன் ரகுவரன் அவர்களின் ரோபோ எலிச் சதி, வேளாங்கண்ணி கடற்கரை முதல் பழனி மலை வரையிலான அதிரடிப் பயணங்கள், குஷ்பு - பானுப்பிரியா இடையிலான காதல் கலாட்டா என 90-களின் சினிமா பாணியில் விரியும் ஒரு ஜாலி காமெடிப் பயணம் இது! 11 நாள் தவத்தின் முடிவில் 'ராஜ எலி' சிக்கியதா? சத்யராஜின் கழுத்தில் மாலை விழுந்ததா? ​தளத்தின் புதிய அம்சங்கள் - வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்! ​நமது கியா ஜோதி எழுத்துலகம் இப்போது இன்னும் நவீனமாக மாறியுள்ளது. வாசகர்களுக்காக இதோ இரண்டு புதிய வசதிகள்: ​Follow Button (பின்தொடர்க): நமது கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நீங்கள் தவறவிடாமல் இருக்க, தளத்தில் உள்ள 'Follow' பக்கத்தை ஓப்பன் செய்து பின்தொடருங்கள். இதன் மூலம் புதிய பதிவுகள் வந்தவுடன் உங்களுக்குத் தகவல் கிடைக்கும். ​Translate Option (மொழிபெயர்ப்பு): உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, மற்ற மொழியினரும் ரசிக்கும் வகையில் 'Translate' வசதி இப்போது நம் தளத்தில் உள்ளது. உங்கள் விருப்பமான மொழியில் கதையை மாற்றி வாசிக்கலாம்.

Comments